Admk General Assembly Power: பொதுக்குழுவுக்கு பதவிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் உண்டு: அ.தி.மு.க. தரப்பில் வாதம்

டெல்லி: அதிமுக பொதுக்குழுவிற்கு அனைத்து (Admk General Assembly Power) அதிகாரங்கள் உள்ளது. ஒரு பதவியை பொதுக்குழுவால் உருவாக்க முடியும் எனில் அதனை நீக்குகின்ற அதிகாரமும் இருக்கிறது என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற ஓ.பி.எஸ். தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வம் தரப்பு வாதம் கடந்த 6ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அர்யமா சுந்தரம் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது அவர் பேசும்போது கட்சியின் அடிப்படையை நீதிமன்றம் முதலில் தெரிந்து கொள்வது அவசியம். எல்லா விஷயங்களுக்கும் ஒன்னரை கோடி தொண்டர்களிடம் செல்ல முடியாது. அதன் காரணமாகத்தான் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு என்பது கட்சியின் பாராளுமன்றம் போன்றது.

பொதுக்குழு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை கொண்ட ஒரு அமைப்பு. பொதுக்குழு உறுப்பினர்கள், அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவும், முகமாகவும் இருக்கின்றனர். தொண்டர்களுக்கு விகித்தாச்சாரம் அளிக்கின்ற வகையிலே பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கின்ற முடிவை அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவாகவே பார்க்க வேண்டும். எனவே முடிவுகளை எடுப்பதற்கு பொதுக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது. ஒரு பதவியை உருவாக்கவும் முடியும், அதனை நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதமாக உள்ளது.