Naam Tamilar Party Coordinator Seeman : பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

சென்னை: Journalist Savithiri Kannan Arrested, Naam Tamilar Party Coordinator Seeman Condemned: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து எழுதியதற்காக மூத்தப் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை ஜ‌னநாயக உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கைது நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

இதுவரை இல்லாத நடைமுறையாக, வழக்குக்குறித்து புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரைக் கைது செய்வதும், அதுகுறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடைவிதிப்பதுமான போக்குகள் எதேச் சதிகாரப் போக்கின் உச்சமாகும். ஸ்ரீமதி மரணத்தில் புலப்படாதிருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத்தரக் கோரியுமாக இயங்கி வரும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் ஏற்கவே முடியாத ஜ‌னநாயகப் படுகொலையாகும் (democratic assassination).

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டுக் கருத்துப் பரப்புரை செய்த, போராடிய இளைஞர்களைக் (Struggled youth) கைதுசெய்து சிறையிலடைப்பதும், இது குறித்துப் பேசவிடாது ஊடகவியலாளர்களின் குரல் வளையை நெரிப்பதுமான திமுக அரசின் அதீதச் செயல்பாடுகள் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. யாரைக் காப்பாற்றுவதற்காக? எல்லோரையும் பேசவிடாது, நெருக்கடி கொடுத்து இவ்வாறு முடக்குகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் (Savitri Kannan) மீதான கைது நடவடிக்கையைக் கைவிட்டு, அவரை எவ்வித வழக்குமின்றி விடுவிக்க வேண்டுமெனவும், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இக்கொடுங்கோல் போக்கை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும் என‌வும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண உயர்வுக்கு சீமான் கண்டனம்:

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்திய போது, அதனை மு.க.ஸ்டாலின் (Mk. Stalin) எதிர்த்தார். தற்போது அவரது தலைமையில் ஆட்சி செய்யும் திமுக அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே உடனடியாக இதனை திரும்பப் பெற வேண்டும். இதனை நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.