Jasmine flower is sold at Rs.5000 per kg: தேனியில் மல்லிகைப்பூ கிலோ ரூ.5000க்கு விற்பனை

தேனி: Farmers are happy as the prices of jasmine flowers in Theni district have reached a steep peak. தேனி மாவட்டத்தில் மல்லிகைப்பூ விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் தற்போது விளைச்சல் இன்றி வரத்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரையிலும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மேலும் பருவமழை பெய்ய வேண்டிய காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவது விவசாயத்தை கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இதனால் மல்லிகைப்பூக்களின் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பூக்களின் பனிப்பொழிவால் மொட்டுக்கள் செடியிலேயே கருகி விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கேரள எல்லைப்பகுதியான தேனி மாவட்டம் இரு மாநிலங்களையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டுகளிலிருந்து அதிகமாக கேரள மாநிலத்தில் உள்ள குமுளி, கட்டப்பனை, வண்டிபெரியார் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பூக்கள் ஏற்றுமதியாகிறது.

தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி , கம்பம், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த சில மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பூக்கள் வரத்து குறைவதன் காரணமாகவும், சபரிமலை சீசன், வளர்பிறை கடைசி முகூர்த்தம் மற்றும் கார்த்திகை போன்ற விஷேச நாட்களையோட்டி பூக்களின் விலை கடும் உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக தேனி, ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுகளில் மல்லிகை பூவின் விலை இன்று கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.