Nayanthara trolled by Malavika Mohanan: உச்ச நடிகையை கிண்டலடித்த மாளவிகா மோகனன்.. எதற்கு தெரியுமா?

சென்னை: நயன்தாராவின் மேக்கப்பை கிண்டலடித்ததாக நடிகை மாளவிகா மோகனன் மீது ரசிகர்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகை நயன்தாரா கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதைனைத்தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் நயன்தாராவின் அடுத்த படமாக கோல்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து கனெக்ட், நயன்தாரா 75, இறைவன், ஜவான் ஆகிய படங்களை நயன்தாரா தனது கைவசம் வைத்துள்ளார். தமிழ்த் திரையுலகில் பெரும் உச்சத்திற்கு சென்ற நயன்தாராவை, பிரபல நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கிண்டலடித்து பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், ஒரு திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை ஒருவர் உயிர்போகும் நேரத்தில் மருத்துவமனையில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்திருந்தார். கமெர்ஷியல் படமாகவே இருந்தாலும் அது எப்படி நடக்கும் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியிருந்தார்.

ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த காட்சியை தான் மாளவிகா கலாய்த்துள்ளதாக அவருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சில நயன்தாராவின் ரசிகர்கள் கடுப்பாகி மாளவிகா மோகனனை வசைபாடி வருகின்றனர்.

மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், தங்கலான் படத்தில் இருந்து கதாநாயகி மாளவிகா மோகனன் விலகியதாக தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Fans expressed their fury over actress Malavika Mohanan for teasing Nayanthara’s makeup.