Jagan Mohan Reddy is the permanent president : ஜெகன் மோகன் ரெட்டி கட்சியின் ஆயுள் கால நிரந்தரத் தலைவர் : விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

புதுதில்லி : Jagan Mohan Reddy is the permanent president of the party for life: Election Commission seeks explanation : ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆயுள் காலநிரந்தரத் தலைவராக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து அக்கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் ஆயுள்காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ யாரையும் தலைவராக தேர்வு செய்ய முடியாது (According to Election Commission rules, no one can be elected as the leader of registered parties for life or permanently). குறிப்பிட்ட கால இடைவெ ளியில் கட்சியின் அமைப்புரீதியாக கூட்டம் நடத்தியே தேர்வு செய்யப்படவேண்டும். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூட்டத்தில் அக்கட்சியின் ஆயுள்கால நிரந்தரத் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அக் கட்சித் தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இச் செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில், இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது (The Election Commission has sought an explanation from the YSR Congress Party). அதில், அரசியல் கட்சியில் எந்த ஒரு பதவிக்கும் யாரையும் ஆயுள் காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தேர்வு செய்ய முடியாது . அவ்வாறு செய்தால் அதனை தேர்தல் ஆணையம் முழுமையாக நிராகரித்துவிடும் . இது போன்ற தவறான தீர்மானங்களை நிறைவேற்றுவது மற்ற கட்சிகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே , இது கண்டிக்கத் தக்கது என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது . இதையடுத்து , ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘இது தொடர்பாக கட்சி அளவில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது . தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ள தவறை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.