K. Annamalai : சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் கிடையாது: கே.அண்ணாமலை

மதுரை: Hinduism is not based on caste: K. Annamalai : சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் கிடையாது என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

இது குறித்து மதுரை தனியார் விடுதியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராஜா பேசியது நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது (A. Raja’s speech has caused turmoil among the people of the country). அவரது தொகுதியிலேயே 90 சதவீத மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அனைத்து மதத்தினரும் ஆ.ராசாவின் கருத்தை கண்டித்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வகையில், மீண்டும் தான் பேசியது சரி என்ற வாதத்தை ஆ.ராஜா முன் வைத்திருக்கிறார்.

நாயன்மார்கள் 63 பேரில் , 42 பேர் பிராமணர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்ல . ஆழ்வார்கள் 12 பேரில் 10 பேர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. கடவுளுக்கு இணையாக நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் வைத்து பிரதிஷ்டை செய்து வருகிறோம். சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் இருந்தது கிடையாது. ஆ.ராசா பேசியது தொடர்பாக பாஜக கையெழுத்து இயக்கத்தை நடத்தி அதனை குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைப்போம் (We will send it to the President and the Governor). பாஜக தொண்டர்கள் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், தொடர்ந்து திமுகவின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்போம். தமிழகத்தில் திமுகதான் மத அரசியல் செய்கிறது.

ராகுல் காந்தியின் பாத‌யாத்திரை மக்களவைத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கச்சத்தீவினை தாரை வார்த்த பிறகு தான் மீனவர்களுடைய பிரச்னை ஆரம்பித்தது. பாஜகவை பொருத்தவரை கச்சத்தீவு மீண் டும் இந்தியாவிற்கு வரவேண்டும். ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியை புறக்கணித்துவிட்டு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு தமிழக அரசு 50 சதவீத நிதியைக் கொடுக்க முன்வந்தால், தமிழக அமைச்சர்களை மத்திய அரசிடம் நானே அழைத்துச் சென்று மீதமுள்ள நிதியை வாங்கித் தருகிறேன். தமிழகத்தில் தான் சாதி பாகுபாடு அதிகம் உள்ளது (There is a lot of caste discrimination in Tamil Nadu). நாட்டிலேலேயே சாதி தொடர்பான கொலைகள். கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான் என்றார் அவர்.