Independence Day Walk : நாளை சங்கொல்லி ராயண்ணா சதுக்கம் முதல் பசவனகுடி கல்லூரி மைதானம் வரை காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின நடைபயணம்

பெங்களூரு: Independence Day walk by Congress : பெங்களூரு சங்கொல்லி ராயண்ணா சதுக்கம் முதல் பசவனகுடி கல்லூரி மைதானம் வரை திங்கள்கிழமை (ஆக. 15) காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின நடைபயணம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள சதாசிவநகர் இல்லத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பெங்களூர் சங்கொல்லி ராயண்ண சதுக்கத்தில் இருந்து பசவகுடி கல்லூரி மைதானத்திற்கு ஆக. 15 ஆம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள ‘சுதந்திர தின நடைபயணம்’ (Independence Day Walk) நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பல்வேறு மாவட்டத்தைச் காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு நகரின் வெளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதன் விவரம் பின்வருமாறு:

  1. தும்கூரு சாலை வழியாக (Via Tumkur road) பெங்களூருக்கு வரும், பெல்காம், பாகல்கோட், ஹாவேரி, பீதர், ஹுப்பள்ளி, தார்வாட், கொப்பள், பெல்லாரி, தாவணகெரே, சித்ரதுர்கா, தும்கூர், தென் கன்னடம், வட‌ கன்னடம், உடுப்பி, சிக்கமகளுரு, ஹாசன், பிஜப்பூர், ராய்ச்சூர், விஜயநகர் (ஹோசப்பேட்டை) ஷிமோகா விலிருந்து வரும் வாகனங்கள் சர்வதேச எக்சிபிஷன் சென்டரில் வாகனங்களை நிறுத்திவிட்டு, நாகசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  2. மைசூரு சாலை வழியாக (Via Mysore Road) பெங்களூரு வரும், ராமநகர் (கனகபுரம்), குடகு, மைசூரு, சாம்ராஜநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கெங்கேரி அருகே உள்ள உலக‌ ஒக்கலிகர மகா சபை மடத்தின் அருகே உள்ள‌ மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  3. கனகபுரா சாலை வழியாக (Via Kanakapura Road) பெங்களூரு வரும், கனகபுரம், மளவள்ளி, அன்னூர், கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர்கள் கனகபுரம் சாலை நைஸ் ஜக்ஷன் அருகே வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கொணனகுண்டே மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜெஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வரும் வசதி செய்யப்பட்டுள்ளது.
  4. கே.ஆர்.புரம் வழியாக (Via KR Puram) பெங்களூரு வரும, கோலார், ஹொச‌க்கோட்டை, சிந்தாமணி பகுதியிலிருந்து வருபவர்கள் ஐடிஐ. மைதானத்தில் வாகனம் நிறுத்தி வைக்க‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அங்கிருந்து பைப்பனஹள்ளி மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  5. சிக்கபள்ளாபூரு, தொட்டபள்ளாபூரு, தேவஹள்ளி, எலஹங்கா வழியாக (Via Yelahanka) பெங்களூரு வருபவர்கள் யஸ்வந்தபுரத்தில் உள்ள சாண்டல் சோப் பேக்டரி மெட்ரோ நிலையத்திலிருந்து மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மெஜஸ்டிக் மெட்ரோ நிலையத்திற்கு வந்து, அருகில் உள்ள சங்கொல்லி ராயண்ண சதுக்கத்தில் (At Sangolli Rayanna circle) காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நடைபயணம் பவசனகுடி நேஷனல் கல்லூரியின் (Bhavasanagudi National College) மைதானத்திற்கு வந்த பிறகு நடைபயணத்தில் கலந்து கொள்பவர்கள், பின்னர் திரும்பிச் செல்ல நேஷனல் கல்லூரி மெட்ரோ நிலையத்திலிருந்து தாங்கள் வந்த மெட்ரோ நிலையத்திற்கு திரும்ப செல்ல இலவச மெட்ரோ ரயில் பாஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இந்த ஏறபாட்டைச் செய்துள்ளது, இதனை நடைபயணத்தில் பங்கு கொள்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெங்களூரைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாகனங்களுக்குப் பதிலாக மெட்ரோ ரயில் (Metro train) மற்றும் பொதுப் போக்குவரத்தை முடிந்தவரை பயன்படுத்த வேண்டும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று டி.கே. சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.