If we fail to protect Tamil, it will be a loss for the country: தமிழை காக்கத் தவறினால் நாட்டிற்கே இழப்பு: பிரதமர் மோடி

வாரணாசி: Prime Minister Narendra Modi has said that failure to protect the world’s oldest language, Tamil, will be a loss for the country. உலகின் பழமையான தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாசாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதன் நோக்கமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த சங்கமம் நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. மாதம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ்நாட்டின் 12 இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விருந்தினர்கள் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்களில் பல்வேறு குழுக்களாக காசிக்கு சென்றுள்ளனர். இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இசையமைப்பாளர் இளையராஜா, மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சங்கம விழாவில் பேசிய பிரதமர் மோடி, காசியும் தமிழ்நாடும் பழமையான பாரம்பரியம் கொண்டது. காசியும் தமிழ்நாடும் சிவமயமானது, சக்திமயமானது. காசி வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. தேச ஒற்றுமையை வளர்க்கவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி. உலகின் மிக பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழிக்கு இந்தியா தான் வீடு. இதற்காக பெருமை கொள்ளும் அதே நேரத்தில் தமிழ் மொழியை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் பழமையான தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே இழப்பு எனவும், காசி தமிழ் சங்கமம் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத நினைவாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.