Cauvery floods: தமிழகம் ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து 1.09 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: காவிரியில் வெள்ளப் பெருக்கு

காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி : Hogenakkal increases water flow to 1.09 lakh cubic feet: காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஒகனேக்கல்லுக்கு நீர் வரத்து 1.09 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம், கேரள மாநிலம் வய நாட்டில் (Kerala Wayanad)தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். கபினி அணைகள் நிரம்பி வருகின்றனர். இதன் காரணமாக அங்கிருந்த அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 15 ஆயிரம் கன அடியும், கபினி ஆற்றில் இருந்து 20 ஆயிரம் கன அடியும், இரு அணைகளிலிருந்து மொத்தமாக 35 ஆயிரம் கன அடியும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி ஆற்றின் அருகே உள்ள அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல், மொசல் மடுவு உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. துணை ஆறான தொட்டெல்லா ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகனேக்கல் காவிரி ஆற்றில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி 1.09 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டுவில் இருந்து ஒகனேக்கல்லுக்கு தொடந்து நீர் வரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த 3 நாள்களாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், ஒகனேக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப் பெருக்கு காரணமாக 47 வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை (Tourists are banned) விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கே.ஆர்.எஸ், கபினி அணிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கருதுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் (Tiruvarur, Nagapattinam) உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பேருந்து நிலையம், சமுதாயக் கூடம், முதலைப் பண்ணை சாலை ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேட்டூர் அணை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை மாலை நொடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அணைக்கு மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.20 கன அடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான‌ பகுதிக்கு சென்று, வசிக்க‌ எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.