Heavy Snowfall: கடும் பனிப்பொழிவு, உறை பணியில் உறைந்த ஊட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடுமையான (Heavy Snowfall) பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரியாகவும், ஊட்டியில் குறைந்தபட்சம் வெப்பநிலை 2.8 டிகிரியாகவும் பதிவாகியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு காலை நேரங்களில் வெளியில் வரமுடியாமல் சில இடங்களில் தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகளில் இன்று (ஜனவரி 10) அதிகாலை கடுமையான உறை பனிப்பொழிவு காணப்பட்டது. ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில் தற்போது இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

மேலும் ஊட்டியில் அதிகாலை குறைந்தபட்சமாக வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் உரைபனியால் இன்று அவலாஞ்சியில் ஜீரோ டிகிரி செல்சியசும், ஊட்டியில் 2.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் மாலை 4 மணி முதல் அதிகாலை 9 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே போல ஊட்டி நகராட்சி சந்தையில் பாரம் தூக்கம் தொழிலாளர்கள் சாலை ஓரங்களில் தீமூட்டி குளிரை சமாளிப்பதற்கான வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.