Heavy rainfall: சிக்கமகளூர் மாவட்டத்தில் மழை பாதிப்பு மோட்டார் பைக்கில் சென்றவர் மீது மரம் விழுந்து ஒருவர் சாவு

Heavy rainfall in Chikkamagaluru: tree falls one person died
Image credit to News Next Tamil

Heavy rainfall: சிக்கமகளூர் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று வரை கடந்த ஐந்து நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது இதனால் பல இடங்களில் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டும் மற்றும் அதிகப்படியான காற்றுக்கு மரங்கள் விழுந்தும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது

நேற்று இரவு மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் இன்று 16ஆம் தேதி அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக விடுமுறை அளித்து அறிவித்திருந்தார் இந்த அறிவிப்பு நேற்று இரவு வந்த நிலையில் இன்று அதிகாலை நிரந்தரமாக மழை பெய்து கொண்டிருந்தது

Heavy rainfall in Chikkamagaluru: tree falls one person died
Image credit to News Next Tamil

சிக்கமகளூர மாவட்டத்தில் பல இடங்களில் மழைக்கு மின் வயறும் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும் விழுந்து உள்ளது ஆல்தூரில் இருந்து பைக்கில் சென்று கொண்டிருந்த எலேகல் கிராமத்தைச் சேர்ந்த அணில் 53 வயது என்கின்றவர் மீது கடுபுகெரெ கிராமத்தில் மரம் ஒன்று விழுந்து அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அங்கு வந்த தீயணைப்பு படை வாகனத்தின் மூலம் அவரது உடலை பாலேஹொன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்

பின்னர் அந்த மரத்தை அப்புறப்படுத்தி அவரது உடலை பிரேத பிரேத சோதனை செய்து உடலை ஒப்படைத்தனர் பாலேஹொன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Heavy rainfall in Chikkamagaluru: tree falls one person died
Image credit to News Next Tamil

சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகா மேகூர் கிராமத்தில் பெரிய மரம் ஒன்று விழுந்து சாலையில் குறுக்கே விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது இதனால் மேகூர் கொக்ரே கிராமத்திற்கு செல்லக்கூடிய வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டது சிக்கமகளூர் அருகே உள்ள கைமரம் என்னும் பகுதியில் பாபாபுடன் கிரி முல்லையன்கிரி செல்லும் இடைப்பட்ட பகுதயில் பெரிய மரம் ஒன்று ரோட்டின் குறுக்கே விழுந்தது வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலிசாரும் சமூக ஆர்வலர்களும் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள் போக்குவரத்துக்கு வழி வகுத்துக் கொடுத்தனர் நிரந்தரமாக மழை பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்ப ஏற்பட்டு உள்ளது