Heavy Rain: இன்று சிக்கமகளூருக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ்ஜார்க்கி ஹொலி சிக்கமகளூர் மாவட்டம் சந்திர திருக்கோண மலைப்பகுதியில் உள்ள பாபாபுடன் கிரி சாலை முல்லையன் கிரி சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததை பார்தார்

தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் அங்கு சென்று அமைச்சர் பார்வையிட்டார் முதலில் கவிகல்கண்டி என்னும் இடத்தில் சாலையில் கடந்த ஆண்டு மண் சரிவு ஏற்பட்டிருந்தது சிமெண்ட் வேலை செய்துள்ள நிலையில் முற்றிலும் சரி செய்து இதற்கு தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

மேலும் அத்திகுந்தி மற்றும் மகள்கோடு என்னும் ரோட்டிலும் இருந்த பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட பல இடங்களுக்கும் தடுப்பு சுவர் கட்ட அவர் உத்தரவிட்டார் முல்லையன்கிரி செல்லும் மலைப் பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் தார் அனைத்தும் இல்லாமல் இருப்பதை பார்வையிட்டு மற்றும் பல இடங்களை பார்வையிட்டார்

அங்கு வந்த அதிகாரியிடம் அத்தியாவசிய தேவை என்னவோ அதை உடனடியாக சரி செய்து வெளியூரிலிருந்து சுற்றுலா வருபவர்களுக்கும் அனைருகும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் பெயர் பலகை வைக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை பலகைகளும் வைக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு எச்சரித்தார் அவருடன் தொகுதி எம்எல்ஏ தம்மையா மற்றும் பலர் உடன் இருந்தனர்



