Heavy rain in Karnataka : கர்நாடகாவில் கனமழை: 16 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பெங்களூரு : Heavy rain in Karnataka: Red alert issued for 3 days in 16 districts : வானிலை ஆய்வு மையத்தின்படி, மாநிலத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்யும். அதன் பிறகு மழை குறையும். கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும், மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யும். அடுத்து வரும் நாட்களில் மழை வட இந்தியாவை நோக்கி நகரும், மாநிலத்தில் மழை அளவு குறையும்.

ஏற்கனவே பருவமழை (Monsoon rain) பரவலாக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக‌ பெய்து வருகிறது. அடுத்த 2 முதல் 3 நாட்களில் கடலோர மற்றும் மலைநாடு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்றும், அடுத்த நாளில் பருவமழை வட இந்தியாவை நோக்கி நகர்ந்து மாநிலத்தில் மழையின் அளவு குறையும். சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், சில நாட்களுக்கு பின், மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று 16 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது

கடலோர உடுப்பி, வட, தென் கன்னட மாவட்டங்கள் (North and South Kannada Districts) மற்றும் சிக்க‌மகளூர், குடகு ஷிமோகா போன்ற மலைகள் அதிக உள்ள‌ மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாசன், யாதகிரி, கலபுர்கி, பீதர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சிக்கை மற்றும் பெல்காம், ராய்ச்சூர், விஜயப்பூர், சாமராஜநகர், தாவணகெரே மற்றும் மைசூரு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடகு, கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென் கன்னட‌ மாவட்டத்தில் பருவமழை சனிக்கிழமை மேலும் தீவிரமடைந்துள்ளது ஆகஸ்ட் 7 ஆம் தேதி சிகப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. மழையுடன், பலத்த‌ காற்றும் வீசுவதால் குளிர்ந்த காலநிலை நீடிக்கிறது. வெப்பநிலை ஏற்கனவே 6 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் (Fishermen should not go to sea) என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து மழை மெதுவாக குறையும்.

குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி நகர் (Madikeri city) முழுவதும் சனிக்கிழமை கனமழை பெய்தது. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால், கிராமப் பகுதிகள் மின்சாரம் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கெடாமுல்லூர் கிராமத்திற்குட்பட்ட தோமர பாடசாலையில் பராமரிப்பு நிலையம் திறக்கப்பட்டு 15 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேருக்கு தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தோரா கிராம (Tora villagers) மக்களும் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எல்லையில் உள்ள குடகு கிராமங்களான செம்பு, சம்பாஜே, மதேநாடு மற்றும் தென்கன்னட‌ மாவட்டத்தின் மற்ற‌ பகுதிகள் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது (People’s normal lives have been disrupted). டபட்கா, உறுபைலு உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் இல்லாமல் உள்ளூர் மக்கள் சிரமப்படுகின்றனர். சில இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கன மழையால் தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி, சிக்கமகளூர், ஹாசன் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.