Heavy rain expected in 12 districts: 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

சென்னை: Heavy rain expected in 12 districts: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (19.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (20.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.08.2022 மற்றும் 22.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திண்டுக்கல் (திண்டுக்கல்) 10, ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 9, கொள்ளிடம் (மயிலாடுதுறை) 7, பரங்கிப்பேட்டை (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), ராசிபுரம் (நாமக்கல்) தலா 6, கே.எம்.கோயில் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), சிவகங்கை (சிவகங்கை ), காரியாபட்ருப்புக் தலா 5, திருப்புவனம் (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), கடலூர் (கடலூர்), புலிப்பட்டி (மதுரை) , டேனிஷ்பேட்டை (சேலம்) , பரமத்திவேளூர் (மேட்டூர்) சேலம்) தலா 4, புவனகிரி (கடலூர்), வட்டானம் (ராமநாதபுரம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சங்கரன்கோவில் (தென்காசி), மதுக்கூர் (தஞ்சாவூர்), புதுச்சேரி (புதுச்சேரி), தேவாலா (தஞ்சாவூர்), தேவாலா (திருச்சுழிமலை , நீலகிரி) சேலம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சங்கரிதுர்க் (சேலம்) , கமுதி (ராமநாதபுரம்), அவினாசி (திருப்பூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பண்ருட்டி (கடலூர்) தலா 3.