All-India Consumer Price Index Tamilnadu Top: தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடம்

சென்னை: All-India Consumer Price Index Tamilnadu Top: கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டில் அதிக புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை 1986-87=100) 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக உள்ளது. அரிசி, கோதுமை- ஆட்டா, கம்பு, தானியங்கள், பால், மீன் வெங்காயம், பச்சை/ காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொது குறியீட்டு உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இந்தக் குறியீட்டு உயர்வு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது. விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 13 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், 1301 புள்ளிகளுடன் தமிழகம் பட்டியலில் முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இவ்வாறு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (பொது & குழு வாரியாக):

குழுவிவசாயத் தொழிலாளர்கள்கிராமப்புற தொழிலாளர்கள்
 ஜூன், 2022ஜூலை, 2022ஜூன், 2022ஜூலை, 2022
பொது குறியீடு1125113111371143
உணவு1052105810601066
பான், சுபாரி போன்றவை.1911191319201923
எரிபொருள் மற்றும் ஒளி1261126312541255
ஆடை, படுக்கை & பாதணிகள்1183119012181226
இதர1191119611961201