Hassan Accident: கர்நாடகாவில் பயங்கர விபத்து: 9 பேர் பலி, 10 பேர் படுகாயம்

ஹாசன்: Hassan Deadly Accident: 9 dead, 10 injured in three-vehicle. ஹாசனில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கர்நாடக மாநிலம், ஹாசனில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் அர்சிகெரே தாலுகாவில் KMF பால் டேங்கர் லாரியும், கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) பேருந்து மற்றும் டெம்போ டிராவலர் விபத்துக்குள்ளானது. டெம்போ டிராவலரில் தர்மஸ்தலா, சுப்ரமணி, ஹாசனாம்பா கோவில்களுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த விபத்தில் டெம்போ டிராவலரில் பயணம் செய்தவர்கள், விபத்துக்குள்ளான பேருந்துக்கும் பால் டேங்கர் லாரிக்கும் இடையில் சிக்கினர். அவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் லீலாவதி, 50, சைத்ரா, 33, சமர்த், 10, டிம்பி, 12, தன்மை, 10, துருவா, 2, வந்தனா, 20, டோட்டையா, 60, மற்றும் பாரதி, 50 என உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெம்போ டிராவலரில் பயணித்தவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு சில கிலோமீட்டர் முன்பே விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாசன் போலீஸ் எஸ்.பி., ஹரிராம் சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, தேவையான அனைத்து நடைமுறைகளும் பின்பற்ற அறிவுறுத்தினர்.