Muruga devotees: பக்தர்கள் மாநாடு 22 ஆம் தேதி ஞாயிறு மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நடக்க உள்ளது இதற்கென பிரம்மாண்டமாக அங்கு மாநாட்டிற்கு தயாராகி வரும் நிலையில் இந்து முன்னணியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பலரும் ஒன்று சேர்ந்து அங்கு குவிந்து பிரமாண்டமான ஏற்பாடு செய்து உள்ளனர்

ஆறுபடை முருகன் கோவிலில் தத்துரூபமாக படம் பிடித்து அங்கு கொவிலை தற்காலிகமாக நிறுவப்பட்டு உள்ளது அதில் பழனி முருகன் பழமுதிர்ச்சோலை முருகன் திருப்பரங்குன்றம் முருகன் திருச்செந்தூர் முருகன் சுவாமிமலை முருகன் திருதனி முருகன் என ஆறுபடை கோவிலையும் ஒரே இடத்தில் வைத்து கடந்த இரண்டு நாட்களாகவே பக்தர்கள் கூட்டமாக வந்து அலை மோதி அதை தரிசனம் செய்து ஆறுபடையும் ஒரே இடத்தில் தரிசனம் செயதாக கூறினர்

இந்த மாநாட்டு பந்தலிலே தரிசனம் செய்தது திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்தனர் மாநாட்டிற்க்கு சுமார் 5 லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் வர உள்ளதாகவும் இதற்கு அனைத்து அடிப்படை வசதி கழிப்பறை வசதி வசதி என அனைத்து வசதிகளும் செய்து உள்ளனர்

பஜக முன்னால் தலைவர் அண்ணாமலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் மாநில அளவில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் அனைத்து பிரிவினருக்கும் அனைத்து சமுதாயத்தினருக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது



