Puneeth Raj Kumar Ward : பெங்களுரு மாநகராட்சியில் நடிகர் புனித்ராஜ்குமார் வார்டாக காவிரிநகர் வார்டின் பெயர் மாற்றம்

BBMP ward redistribution : வளர்ந்து வரும் பெங்களூரு மாநகராட்சியின் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மாநில அரசு வார்டுகளின் எண்ணிக்கையை 198 லிருந்து 243 ஆக உயர்த்தி உள்ளது.

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை அறிக்கைக்கு அரசு இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. பெருகிவரும் மாநகராட்சியின் மக்கள் தொகையினை அடிப்படையாகக் கொண்டு, மாநில அரசு பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை (Number of Wards increased in BBMP) 198 லிருந்து 243 ஆக உயர்த்தி உள்ளது.

இதற்கிடையில், மறைந்த நடிகர் புனித் ராஜ் குமாரை கௌரவிக்கும் விதமாக‌, எண் 55, காவிரி நகர் வார்டின் பெயரை புனித் ராஜ்குமார் வார்டென்று பெயர் மாற்றம் செய்ய‌ப்பட்டுள்ளது. இந்த பெயர் மாற்றத்தால் காவிரி நகர் வார்டு, இனி புனித் ராஜ்குமார் வார்டென்று (Puneeth RajKumar nagar Ward) அழைக்கப்படும்.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட மறுவரையறை அறிக்கைக்கு, பொது மக்களிடம் இருந்து 3000 க்கும் அதிகமான‌ ஆட்சேபனை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மற்றும் ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை ஆராய்ந்து, வார்டு மறுவரையறையில் சிறிய மாற்றங்களைச் செய்த பின்னர், இறுதியாக அதிகாரப்பூர்வ பட்டியலை(Finally the official list) அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.

2021-ஆம் ஆண்டு ஜன. 21-ஆம் தேதிய‌ன்று, மாநகராட்சி ஆணையர் (BBMP Commissioner), இணை, துணை ஆணையர்களைக் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவை அரசு உருவாக்கி, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த‌ திட்டமிட்டது. இந்தக் குழு வார்டு மறுவரையறை பட்டியலை நிகழாண்டு ஜூன் 9-ஆம் தேதி அரசிடம் சமர்ப்பித்தது. இது குறித்த பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க‌ 15 நாள்கள் கால அவகாசம் அளித்தது.

இதில், வார்டுகளின் பெயர் மாற்றம், பகுதிகள் பங்கீடு ஆகியவற்றில் அதிருப்தி நிலவியது. இதனையடுத்து மறுவரையறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது இறுதியாக, பெங்களூரு வார்டுகளின் எண்ணிக்கையை 243 ஆக உயர்த்தி அதிகாரப்பூர்வமாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (According to the census) வார்டுகளின் எல்லையை நிர்ணயம் செய்ததாக அரசு கூறியுள்ளது.

மறுவரையறையில் கெங்கேரி வார்டுக்கு பதிலாக கெங்கேரி புறநகர் வார்டு என மாற்றப்பட்டது. கெங்கேரி வார்டு அகற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பிற்கு பிறகு, தற்போது கெங்கேரி புறநகர் வார்டு என்ற பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் கெங்கேரி வார்டு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அண்மையில் காலமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அரசு சிறப்பு கௌரம் வழங்கியதுடன் (special honor given by Govt), வார்டு எண் 55 க்கு புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காவிரிநகர் இனி புனித் ராஜ்குமார் வார்டென்று அழைக்கப்பட உள்ளது.