Avoided Dravidian Model: சட்டசபையில் திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர்

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் (Avoided Dravidian Model) இன்று (ஜனவரி 9) ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

ஆளுநர் தன்னுடைய உரையை வாசித்த போது திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தையை தவிர்த்து வந்தார். மேலும் வளர்ச்சியுடன் கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்ற வார்த்தையும் இடம் பெற்றிருந்த நிலையில் உரையாற்றியபோது அதனை பேசாமல் தவிர்த்து வந்தார். அதே நேரத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் பக்கத்தில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையையும் பேசாமல் தவிர்த்தார்.

மேலும் 46ம் பக்கத்தில் இடம் பெற்றிருந்த சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையும் ஆளுநர் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.