Gold worth Rs.36.32 lakh seized at Chennai airport: சென்னை விமான நிலையத்தில் ரூ.36.32 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: Seizure of 823 grams of Gold worth if 36.32 Lakhs by Chennai Air Customs. சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள 823 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் செப்டம்பர்17 ம் தேதியன்று சென்னை வந்த சையத் இப்ராகிம் முகமது ரஃபி என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, தங்கத்தை பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 707 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் முழுக்கால் சட்டைப்பையில் மறைத்து எடுத்து வந்த 116 கிராம் தங்கச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையின் போது, மொத்தம் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள 823 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கடந்த 13ம் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த முருகன் கோவிந்தராஜூ என்ற பயணியை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, 3 தங்க பிஸ்கெட்டுகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை அவர் அணிந்திருந்த பேண்ட்டில் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 580 கிராம் எடைகொண்ட தங்கம் ரூ.25.99 லட்சமாகும்.

இதேபோல், அதே நாளில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், விமானத்தின் முன்பக்கம் இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 220 கிராம் எடைகொண்ட அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.9.85 லட்சமாகும். இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.