திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (Garbage dumped near Thiruvarur District Collectorate) அருகே, தஞ்சாவூர், நாகை தேசிய நெடுஞ்சாலையில் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை நாகை, தேசிய நெடுஞ்சாலை ஓரம் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு வரும் மிகவும் ஆபத்தான மருத்துவ கழிவுகள் மூட்டை, மூட்டையாக தினமும் கொட்டப்பட்டு வருகிறது. மழை பெய்யும் சமயத்தில் அங்குள்ள குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதும் மட்டுமின்றி அந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள் அனைவரும் மூக்கை பிடித்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
அதே நேரத்தில் அருகாமையில் ஆறு ஒன்றும் இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் இங்கிருந்து அடித்து செல்லப்படும் குப்பை கழிவுகள் ஆற்றில் கலந்து மிகவும் தண்ணீரை விஷமாக்கவும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அது மட்டுமின்றி கால்நடைகளும் மருத்துவ கழிவுகளை உண்பதால் அவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பால் விஷத்தன்மையாகவும் நோய் தொற்றுகளை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முந்தைய செய்தியை பார்க்க:Flood warning: 105 அடியை நெருங்கிய பவானிசாகர் அணை.. வெள்ள அபாய எச்சரிக்கை
முந்தைய செய்தியை பார்க்க:Thai Navi Ships Sinks: தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் நடுக்கடலில் மூழ்கியது: 106 வீரர்களின் கதி என்ன