Ganesha idols melted in Chennai: சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

சென்னை: Ganesha idols melted in Chennai. சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னை முழுவதும் 2,554 விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

இந்நிலையில், சென்னை மாநகர் முழுவதும் உள்மள விநாயகர் சிலைகளை இன்று ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலின் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இன்று நண்பகல் 12 மணி முதல் விநாயகர் சிலையை கரைக்க பொதுமக்கள் பேரணியாக எடுத்துச் சென்றனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் விநாயகர் சிலைகளை பேரணியாக எடுத்து வருகின்றனர். சென்னையில் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை பட்டினபக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க பல்வேறு பகுதிகளிலிருந்துது சிலைகள் கொண்டுவரப்பட்டு அணிவகுத்து நிற்கவைக்கபட்டிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் 200 மீனவ தன்னார்வலர்கள், 200 மேற்பட்ட ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறை மற்றும் கடற்கரை மீட்புபடை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, 20க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்கள், 20 உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் குளிக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பட்டினப்பாக்கம் கடற்கரயைில் 2,000 மேற்பட்ட சிலைகள் இன்று காலை முதல் சென்னையின் முக்கிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு கரைக்கபட்டு வருகின்றன.

அதேபோல், ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட, 25 காவல் நிலையங்களில் அனுமதி பெறப்பட்ட 503 விநாயகர் சிலைகள் இன்று கடலில் கரைக்க கொரட்டூரில் இருந்து அணிவகுத்து புறப்பட்டது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 3,200 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.