Nalini and Murugan including 6 people released : நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் விடுதலை

சென்னை/வேலூர்: former Prime Minister Rajiv Gandhi’s murder convicts 6 have been acquitted : உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்றதும், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சனிக்கிழமை மாலையே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த ஆறு பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் (Nalini, Murugan, Shandan) ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகினர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, தனது தாயாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள பரோல் கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிபந்தனையின் பேரில் பரோல் வழங்கப்பட்டது (He was granted conditional parole in December last year). பரோலில் வெளிவந்த நளினி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதமாக அவர் பரோலில் தனது தாயார் பத்மா உடல் நிலையை கவனித்து வந்த சூழ்நிலையில், நேற்று அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்  நகல் சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், பரோலில் உள்ள நளினியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் (They were released from Vellore Central Jail). சாந்தன், முருகன் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைப்பதற்காக, அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.