Former minister UT Khader : ‘பிரதமர் மோடியின் கூட்டத்திற்கு மக்கள் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுகிறார்கள்’: முன்னாள் அமைச்சர் யு.டி காதர் குற்றச்சாட்டு

மங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மங்களூரு வருவதை யொட்டி, கடற்கரை நகரில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மங்களூரு : Former minister UT Khader: பிரதமர் மோடி வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மங்களூருக்கு வருவதையொட்டி, கடற்கரை நகரில் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்து அமைப்பை சேர்ந்தவரும், பாஜக‌ செயற்குழு உறுப்பினருமான பிரவீன் நெட்டாரு கொலை வழக்குக்கு பின்னர், கடலோர மாவட்டங்களில், பாஜக‌ மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை அடுத்து, பிரதமர் மோடி, மங்களூருக்கு வருகிறார். இத்தனைக்கும் நடுவில் தற்போது பிரதமர் மோடியின் மங்களூரு வருகை குறித்து புதிய சர்ச்சைக்குரிய தகவலை முன்னாள் அமைச்சர் யுடி காதர் தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடியின் (Prime Minister Narendra Modi) கூட்டத்திற்கு மக்கள் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்படுவதாக முன்னாள் அமைச்சர் யு.டி காதர் குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வுக்கான மைதானம் போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மைதானத்தை விட பெரிய இடம் தேவை என்று தோன்றுகிறது. மாவட்ட நிர்வாகம் உடுப்பி-தென் கன்னட பி.டி.ஓ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 250 பேரை நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளதாக யு.டி.காதர் குற்றம் சாட்டினார்.

கிராம அதிகாரி உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வருவாய்த் துறையினரால் (Revenue Department )அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து செயலாளர், லைன் மேன் மற்றும் தண்ணீர் விநியோகம் செய்பவர்களுக்கும் நோட்டீஸ் வந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அனைத்து குழந்தைகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகளுக்கும் நோட்டீஸ் சென்றுள்ளதாகவும், பயனாளிகளை வங்கியில் இருந்து அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலுக்குப் பின், கீழ்மட்ட அதிகாரிகள், நிகழ்ச்சிக்கு மக்களைத் திரட்ட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது குடும்ப உறுப்பினர்களையாவது அதிகாரிகள் அழைத்து வர வேண்டும். இதனால் உடுப்பி மற்றும் தென் கன்னட அதிகாரிகள் அனைவரும் ஒரு வாரமாக பிஸியாக உள்ளனர். அனைத்து மீனவர்களுக்கும் கிசான் கார்டு கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு (Fishermen are also invited to attend the program by giving Kisan card) விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற வாக்குறுதிகள், பயன்கள் அனைத்தும் கிடைத்த பிறகு, மக்கள் கூட்ட‌த்திற்கு வருவார்கள் என்று யு.டி காதர் கிண்டல் செய்தார்.

இந்த நிலையில் செப். 2 ஆம் தேதி பிரதமர் மோடி மங்களூருவுக்கு வருவதையொட்டி, அன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளுக்கு (Schools and Colleges) மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரா விடுமுறை அளித்துள்ளார். இதனையும் யு.டி.காதர் குற்றம் சாட்டியுள்ளார்.