siddaramaiah younger brother ramegowda dies : சித்தராமையாவின் இளைய சகோதரர் ராமேகவுடா காலமானார்

former cm siddaramaiah : முன்னாள் முதல்வர் சித்தராமையா: எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் இளைய சகோதரர் ராமேகவுடா காலமானார்.

மைசூரு: siddaramaiah younger brother ramegowda dies : எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் இளைய சகோதரர் ராமேகவுடா காலமானார். மைசூரு சித்தராமையா நஹுந்தியில் வசிக்கும் 67 வயதான ராமேகவுடா சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராமேகவுடா, மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் வெள்ளிக்கிழமை இரவு ராமேகவுடா காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவராகவும், முன்னாள் முதல்வரின் சகோதரராக (Brother of former Chief Minister) இருந்தபோதும், ராமேகவுடா ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தார். அண்ணன் அரசியலில் உயர் பதவிக்கு வந்தாலும், அவரது எளியயான‌ வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அண்மைக் காலம் வரை, ராமேகவுடா கால்நடை மற்றும் கன்றுகளை மேய்த்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். விவசாயியாக, எளிமையாக வாழ்ந்து வருவதில் ராமேகௌடா ஆர்வம் கொண்டிருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு ராமேகவுடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை மைசூரு சென்ற சித்தராமையா, மருத்துவமனைக்குச் சென்று ராமேகவுடாவை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாள் (Siddaramaiah’s birthday) தாவணகெரேவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்தராமையாவின் லட்சகணக்கான தொண்டார்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ராமகவுடாவால் முடியவில்லை. அப்போதும் நோய் அவரை விட்டு நீங்கவில்லை. கால் வலியால் அவதிப்பட்டு வந்த ராமேகவுடா, தாவணகெரேவுக்கு செல்ல முடியாமல், அண்ணனின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று வேதனை பட்டுள்ளார்.

ராமேகவுடாவின் மறைவுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை (Chief Minister Basavaraj Bommai) சுட்டுரை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் இளைய சகோதரர் ராமேகவுடாவின் மறைவு அறிந்து வருத்தம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், இந்த துயரத்தை தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.