Bomb threat at Chennai airport: சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: There was a commotion at the Chennai airport due to reports of a bomb on a Dubai-bound flight.: சென்னை விமான நிலையத்தில் துபாய் செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.35 மணிக்கு இண்டிகோ விமானம் 174 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்த பின், வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக இண்டிகோ விமானம் நிறுத்திவைக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து இண்டிகோ விமானத்தில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னை விமான நிலையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து ஆகியோர் தீவிரமாக சோதனையிட்டனா். மேலும் விமானத்திலிருந்த 174 பயணிகளையும் சோதனையிட்டனா். சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, சென்னை மணலியிலிருந்து ஒருவர் பேசியது தெரியவந்தது. உடனடியாக சென்னை மாநகர போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த விமானத்தில் அவருடைய தங்கையும், தங்கை கணவரும் துபாய் செல்ல இருந்துள்ளனர். இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை காரணமாக வெடிகுண்டு இருப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டுள்ளதாக தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த சென்னை மாநகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் துபாய் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தாமதமாக இன்று காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.