Forest watcher Pawan : வன ஆய்வாளர் பவன் காணாமல் போன வழக்கு: தொடர்கிறது தேடுதல் வேட்டை

மடிகேரி: Forest watcher Pawan missing case: Search continues : குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மகுட்டா வனப்பகுதியில் பணியில் இருந்த வன ஆய்வாளர் பவன் காணாமல் போனது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுவினரின் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம், கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

மகுட்டா வனச்சரகத்தில் பணியில் இருந்த வன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பவன் (23). இவர் பணியில் இருந்தபோது காணாமல் போனார். பலேலே கிராமத்தைச் சேர்ந்த பவன் என்பவர் காணாமல் போய் உள்ளது தற்போது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பவனுடன் இருந்த ஊழியர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. துர்கா அருவியில் தவறி விழுந்து பவன் இறந்ததாக அவருடன் இருந்த மற்ற வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களின் அளித்த இந்த முரண்பாடான தகவல் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டாளிகள் குழப்பமான வாக்குமூலங்களை அளித்ததையடுத்து, சக ஊழியர்கள் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து விராஜ்பேட்டை ஊரக காவல் நிலைய போலீசார் (Virajpet Rural Police Station) விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவன் காணாமல் போன இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் (National Disaster Response Force) மற்றும் வனத்துறை ஊழியர்கள், தீயணைப்பு படையினர் இணைந்து நடத்தி வருகின்றனர். அணுக முடியாத பகுதியாக இருப்பதால் செயல்பாடுகளை கடினமாக்கி உள்ளது.

போதைப் பொருள் விற்பனை : கோபி மஞ்சூரி கடை நடத்தி வந்தவர் கைது

குடகு: போதைப் பொருள்களுக்கு எதிராக கர்நாடக போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அங்கும் இங்கும் போதைப் பொருட்களை கடத்துபவர்கள், உட்கொள்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, குடகில் விற்பனை செய்த நபரை விராஜ்பேட்டை போலீசார் (Virajpet Police) கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விராஜ்பேட்டையைச் சேர்ந்த சூர்யகாந்த மொகந்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஒரிசாவில் (Orissa) இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்து வந்தார். குடகிலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியபோது பெரும்பாடியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் காரில் கஞ்சாவை எடுத்துச் சென்றபோது பிடிப்பட்டார். தற்போது அவரிடமிருந்து ஆறரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சூர்யகாந்த மொகந்தி விராஜ்பேட்டை மற்றும் ஹல்லிகட்டுவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் கேன்டீன் குத்தகைக்கு எடுத்திருந்தார். இவர் இந்த கேன்டீனை நடத்தி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கல்லூரிகளில் கேன்டீன் நடத்துவது மட்டுமின்றி விராஜ்பேட்டையில் கோபி மஞ்சூரி கடை (Gobi Manchuri Shop) நடத்தி வந்தார். ஆனால் இந்த கோபி மஞ்சூரி கடை பெயருக்காக மட்டுமே நடத்தி வந்துள்ளார். விராஜ்பேட்டை டிஒய்எஸ்பி., வழிகாட்டுதலின்படி, குற்றச் செயலிலில் ஈடுபட்ட சூர்யகாந்தாவை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரிகளில் மாணவர்களுக்கு கஞ்சா வழங்குவது மட்டுமின்றி, அவர்களை கஞ்சா சப்ளை செய்யவும் தயார் படுத்தப்பட்டனர். விசாரணையில் சூர்யகாந்தா கஞ்சா மட்டுமின்றி, போதை பொருட்களையும் சப்ளை செய்து விற்பனை செய்து வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் குடகு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவுக்கும் (Kerala) தொடர்ந்து போதை பொருள்களை சப்ளை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.