Sharjah Flight Stop :கோவை: சார்ஜா புறப்பட்ட விமானத்தின் மீது கழுகு மோதியதால் அதிர்ச்சி

கோவை: கோவை விமான நிலையத்தில் (Sharjah Flight Stop) இருந்து 22 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளுக்கும் ஏர் அரேபியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட விமானங்களும் அடங்கும்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 2) காலை வழக்கம் போல் ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவிற்கு 164 பயணிகளுடன் காலை 7 மணியளவில் புறப்பட்டது. அப்போது விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று 2 கழுகுகள் விமானத்தின் என்ஜின் மீது மோதியது.

அப்போது ஒரு கழுகு என்ஜின் பிளேடு பட்டதில் இறந்து போனது. இந்த சம்பவத்தை உணர்ந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். இந்த சம்பவத்தால் பயணிகள் அனைவரும் உயிர் சேதமின்றி தப்பினர்.

மேலும், பொறியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்து வருகின்றனர். விமானம் விமான நிலையத்தில் சுமார் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.