FIR registered against Yeddyurappa, Vijayendra : முன்னாள் முதல்வர் எடியூரப்பா, விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு

பெங்களூரு: BDA contract corruption case FIR registered against former Chief Minister Yeddyurappa, Vijayendra : முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர் மீது லோக் ஆயுக்தா முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக சமூக ஆர்வலர் டிஜே ஆபிரகாம் (Social activist DJ Abraham) அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறைக்கு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் பி.எஸ். எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர் மீது ஊழல் வழக்கில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் ((PCA) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2019-2021 க்கு இடையில் எடியூரப்பாவின் பதவிக் காலத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் (BDA) டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் தொடர்பான வழக்கு இதுவாகும். தற்போதைய கூட்டுறவு அமைச்சரும், முன்னாள் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் தலைவருமான எஸ்.டி.சோமசேகர் (S. D. Somesekhar), முன்னாள் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் ஆணைய‌ர் ஜி.சி.பிரகாஷ் ஆகியோருடன் இரண்டு தொழிலதிபர்களும் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அரசு கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை ஒப்பந்ததார‌ருக்கு வழங்க பிடிஏ அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் கேட்டதாக சமூக ஆர்வலர் டிஜே ஆபிரகாம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆபிரகாம் செப்டம்பர் 14 ஆம் தேதிய‌ன்று நீதிமன்றத்தை அணுகினார், மேலும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது (The court ordered the first information report to be filed).

டிஜே ஆபிரகாம் கடந்த ஆண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகினார், ஆனால் எடியூரப்பா முதல்வராக இருந்ததால் அனுமதி கோரிய‌ மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் வீட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் குடும்பத்தினர் முதல்வர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வருக்கு லஞ்சம் வழங்கி, திட்டங்களை ஒதுக்கீடு செய்தல், வேகப்படுத்துதல் மற்றும் ஒப்புதல் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு, போலியான பெயர்களில் உள்ள‌ நிறுவனங்களில் இருந்து பணம் மாற்றப்பட்டதாக (Money transferred from entities in fictitious names)புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பதிலளித்த பி.எஸ்.எடியூரப்பா (B. S. Yeddyurappa), நீதித்துறை மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார். “இந்த குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து வெளியே வருவேன். இது போன்ற‌ விஷயங்கள் வாடிக்கையானது, அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை,” என்று அவர் கூறினார். தனக்கு எதிரான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்தப் புகார் என்றும் அவர் தெரிவித்தார்.