Finance Minister handed over appointment letters: சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்

சென்னை: Finance Minister handed over appointment letters .சென்னையில் வருமான வரித்துறையால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ‘ரோஸ்கர் மேளா’ என்ற மெகா ஆட்சேர்ப்பு இயக்கத்தை காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் போது, 10 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் முதல் தவணையாக, அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய பணிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்த நியமனம் பெற்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்துக் கூறினார். புதிய நியமனம் பெற்ற அனைவரும் விழாவில் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் 50 இடங்களில் இது தொடர்பான விழாக்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். சென்னை மண்டலத்தில் மொத்தம் 57 பேர் வருமான வரித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் நேரில் வந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். விழாவில் நேரில் கலந்து கொண்ட 3 பேருக்கு நியமனக் கடிதங்களை நிதியமைச்சர் வழங்கினார்.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அரசு தீவிர ஆட்சேர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, இன்று புதிதாக நியமிக்கப்பட்ட வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் வரி உதவியாளர்களுக்கு 1093 பணி நியமனக் கடிதங்களை வருமான வரித் துறை வழங்கியுள்ளது.