Karaikal-Thanjavur Special Train : காரைக்கால்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சி வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி: Extension of Karaikal-Thanjavur Special Train to Trichy: Southern Railway ; வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி காரைக்கால்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சி வரை செப். 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செப். 8 ஆம் தேதி வேளாங்கண்ணி ஆலய ஆண்டு விழா நடைபெறுகிறது (Velankanni church annual festival is held on sep. 8th). இதனையொட்டி நாளை கொடியேற்றி, விழா தொடங்கப்படுகிறது. இந்த விழா செப். 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, காரைக்கால்-தஞ்சாவூர் சிறப்பு ரயில் திருச்சி வரை செப். 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே (Southern Railway) திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு: காரைக்காலில் மாலை 6.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், தஞ்சாவூருக்கு இரவு 8.55 மணிக்கு சென்ற‌டையும். மீண்டும் அந்த ரயில், இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சியை சென்றடையும். இரவு 10.40 மணிக்கு திருச்சியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படும்.

மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு அந்த ரயில் வேளாங்கண்ணியை (Velankanni) சென்றடையும்.சிறப்பு ரயில் மீண்டும் அதிகாலை 3.05 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு காலை 5.30 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும். அங்கிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை காலை 7 மணியளவில் சென்றடையும்.

இதனைத்தவிர திருச்சி-வேளாங்கண்ணி, வேளாங்கண்ணி-நாகை இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. திருச்சியில் (Trichy) நண்பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை 3.50 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். அங்கிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.45 மணிக்கு திருச்சி வந்தடையும்.

வேளாங்கண்ணியில் பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் பிற்ப‌கல் 1 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். அங்கிருந்து பிற்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு, 1.55 மணிக்கு வேளாங்கண்ணியை வந்தடையும். மீண்டும் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 புறப்படும் ரயில், பிற்பகல் 2.25 மணிக்கு நாகப்பட்டினம் (Nagapattinam) சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் இன்று முதல் செப். 8-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.