save rain water : மழை நீரை சேமித்து வேளாண் உற்பத்தியை பெருக்குவோம்: பிரதமர் நரேந்திர மோடி

தில்லி: save rain water and increase agricultural production: PM Narendra Modi : நாட்டின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, மழை நீரை வீணாக்காமல், சேமித்து வேளாண் உற்பத்தியை பெருக்குவோம், மேலும் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ப்யிரிடவும், பயன்படுத்தவும் வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனத்தின் குரல் (மன்கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கலந்து கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி இன்று அவர் பேசியது: நாட்டின் சுதந்திர தினத்தன்று ஹர்கர் திரங்கா எனப்படும், வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை புதுமையான முறையில் செயல்படுத்தியதற்காக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அமுதப் பெருவிழா மற்றும் சுதந்திர் நாட்டின் வலிமையை நாம் பார்த்தோம். சுந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சிகளைக் கொண்டு நடைபெறும் சுவராஜ் நிகழ்ச்சியை அரசின் தொலைக்காட்சியில் கண்டு களிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து பற்றாக் குறை பெரும் பிரச்னையாக உள்ளது (Malnutrition is a major problem). இதிலிருந்து நாடு விடுபட ஜலஜீவன் திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. விண்ணில் இருந்து விழும் ஒவ்வொரு நீர் துளியையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உணவு உற்பத்தியை பெருக்க முடியும். இது தேசத்தின் எழுச்சிக்கு உந்து சக்தியை அளிக்கும். ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு மக்கள் மற்றும் நம்முடைய விவசாயிகள் பயன்படக் கூடிய வகையிலான சிறு தானியங்களின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே (Awareness among people) அதிகரிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அடுத்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. சிறுதானிங்கள் சத்து அதிகம் உள்ளவை. சிறுதானைய சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீரே போதும். எனவே சிறுதானிய சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.