Erode East by Election: ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிப்பு

ஈரோடு: EVKS Ilangovan announced as Congress candidate for Erode East constituency. ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

பதவியில் இருப்பவர் இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாகும், மேலும் அவை பிப்ரவரி 8-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்கள் வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் யாரை களமிறக்குவது என அந்தந்த கட்சிகள் மும்முரமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி அறிவித்தது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.