Anna medal : தமிழக அரசின் “அண்ணா பதக்கம்” வீர தீர செயலுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: Eligible applications are welcome for Tamil Nadu Government’s “Anna medal” : வீர, தீரச் செயல்களுக்கான தமிழக அரசின் “அண்ணா பதக்கம்” வீர, தீர செயலுக்கு தகுதியான விண்ணப்பங்கள் டிச. 15‍ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வீர, தீரச் செயல்களுக்கான ” அண்ணா பதக்கம் ” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வர் அவர்களால், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது (Presented during Republic Day celebrations). ரூ.1,00,000 (ஒரு லட்சம் மட்டும்)-க்கான காசோலை, ரூ.9,000 மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை, 2023 – ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) வீர‌, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ மட்டுமே நிகழாண்டு டிச. 15 ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் . பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள் , இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு தமிழக முதல்வர் (Chief Minister of Tamil Nadu) அவர்களால் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.