Rescheduling of Train Service: சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

சென்னை: Rescheduling of Chennai Central – Mysore Shatabdi Express Train. சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 6 மணிக்கு பதிலாக 7மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன் முறையாக அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில், சென்னை ஐசிஎப் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 ரயில்கள் பிரதமர் மோடியால் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து 5வது ரயிலாக சென்னை- மைசூர் இடையே இயக்கப்படுகிறது. இதன் சோதனை ஓட்டம் கடந்த 7ம் தேதி சென்னையிலிருந்து தொடங்கியது. இந்த ரயிலை வரும் நாளை (11ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

வந்தே பாரத் ரயில் தினமும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு, 7.25க்கு காட்பாடி ரயில்நிலையத்தை வந்தடையும், இதனைத்தொடர்ந்து ஜோலார்பேட்டையில் 8.30 மணிக்கும், பெங்களூருவில் 10.25க்கும், மைசூர் ரயில்நிலையத்திற்கு 12.20க்கும் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாள்தோறும் காலை 6 மணிக்கு சென்னை சென்ட்ரலிருந்து மைசூருக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இதனால் காலையில் மைசூருக்கு 2 ரயில்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதாகவும், இதனை மாற்றி அமைக்க ரயில் பயணிகள் சங்கங்கள் தெற்கு ரயில்வேவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் தற்போது சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் சேவை ரயில் எண்.12007 மாற்றுதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் 11.11.2022 அன்று (நாளை) காலை 06.00 மணிக்கு புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், 11.11.2021 அன்று காலை 07.00 மணிக்கு (1 மணிநேரம் தாமதமாக) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.