Drunken elephants : குடிகார யானைகளுக்கு ஆழ்ந்த உறக்கம்: கண்விழிக்க வைக்க‌ படாதபாடு பட்ட வனத்துறையினர்

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாராயத்தை காட்டுக்குள் தயாரித்துள்ளனர். ​​அவர்கள் தயாரித்த சாராயத்தை அங்கு வந்த யானைக்கூட்டம் குடித்துள்ளன‌. போதை தரும் பூக்களால் தயாரிக்கப்பட்ட மஹுவா சாராயத்தை குடித்துவிட்டு யானைகள் அங்கேயே தூங்கி விட்ட‌ன.

ஒடிசா: Drunken elephants:  பொதுவாக மது குடித்து விட்டு படுத்திருப்பவர்களைத்தான் பார்ப்பீர்கள். ஆனால் மணிக்கணக்கில் மது அருந்திவிட்டு யானைகள் தூங்கிய சம்பவம் ஒடிசா வனப்பகுதியில் நடந்துள்ளது. போதையில் தூங்கிய யானைகளை எழுப்ப வனத்துறையினர் படாத பாடுபட்டு சோர்ந்து போயுள்ளனர்.

ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாராயத்தை காட்டுக்குள் தயாரித்துள்ளனர். ​​அவர்கள் தயாரித்த சாராயத்தை அங்கு வந்த யானைக்கூட்டம் குடித்துள்ளன‌ (The herd of elephants who came there drank the liquor). போதை தரும் பூக்களால் தயாரிக்கப்பட்ட மஹுவா சாராயத்தை குடித்து விட்டு யானைகள் அங்கேயே தூங்கி விட்ட‌ன.

ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மஹுவா என்ற பாரம்பரிய சாராய‌த்தை தயாரிக்க கிராம மக்கள் காட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்கள் தயாரித்த சாராயத்தை குடித்து விட்டு 24 யானைகள் அயர்ந்து தூங்குவதை கண்டு வன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஷிலிபாடா முந்திரி காடு (Shilipada Cashew forest) அருகே வசிக்கும் கிராம மக்கள் கூறுகையில், மஹுவாவை தயார் செய்வதற்காக காலை 6 மணியளவில் வனப்பகுதிக்கு சென்றபோது, ​​தண்ணீரில் மஹுவா பூக்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் 9 ஆண், 6 பெண் மற்றும் 9 குட்டி யானைகள் கொண்ட படை தூங்கி கொண்டிருந்தன. அந்த யானைகள் பெரிய பானைகள். மற்றும் தொட்டிகள் அனைத்தையும் உடைந்து தண்ணீர் குடிக்க பார்த்துள்ளன. ஆனால் யானைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் யானைகள் சுத்திகரிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த‌ சாராயத்தை குடித்ததாக கூற‌ப்படுகிறது.

அங்கு சென்ற கிராம மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த யானைகளை எழுப்பினர் ஆனால் அவை எழுந்திருக்கவில்லை. எனவே வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் யானைகள் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மேள தாளம் முழங்கியவுடன் (As soon as the drum beats) யானைகள் எழுந்து வனப்பகுதிக்குள் ஓடியதாக, வன பாதுகாவலர் காசிராம் பத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.