Egg price increased: முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ.4.35 ஆக நிர்ணயம்

நாமக்கல்: Egg price has increased by 5 paisa to Rs.4.35. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒன்றுக்கு ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நாமக்கல், திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்இசிசி முட்டைக்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணையாளர்களும் இந்த விலையை பின்பற்றி வருகின்றனர். மொத்த முட்டை விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகளிலிருந்து 5 கோடி முட்டை இனக் கோழிகள் வளர்க்கப்பட்டு, தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவது முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.30ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.05 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 460, பர்வாலா 435, பெங்களூர் 445, டெல்லி 457, ஹைதராபாத் 412, மும்பை 477, மைசூர் 447, விஜயவாடா 435, ஹெஸ்பேட் 405, கொல்கத்தா 500.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 84 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.