EPS strongly condemned the arrest of AIADMK MLAs: அதிமுக எம்எல்ஏக்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

கோவை: Edappadi Palaniswami strongly condemned the arrest of AIADMK MLAs. கோவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. ஏற்கெனவே இவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இன்று சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அதிமுக முன்னாள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையால் கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டு முன் ஏராளமான தொண்டர்கள் குந்தனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அங்கு குவிந்த அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால், ஆதரவாளர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.