Edappadi Palaniswami campaign: ஈரோட்டில் வரும் 12ம் தேதி எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

ஈரோடு: Edappadi Palaniswami campaign in Erode on 12th. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வரும் 12ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் பலர் வந்து ஆர்வமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தீவிர பிரசாரம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதியும், உதயநிதி ஸ்டாலின் 19 மற்றும் 20-ம் தேதிகளில் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்ய உள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் 12ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபுவதாக என்று தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் அவர் தீவிர பிரசாரம் செய்யப்போவதாக கூறப்படுகிறது.