Online Rummy: மாநிலங்கள் அனைத்தும் முன்வந்தால் ரம்மிக்கு தடை: மத்திய அமைச்சர்

Online Rummy
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தற்கொலை

புதுடெல்லி: The Union Minister has said that online rummy will be banned at the national level if all the states raise the issue. அனைத்து மாநிலங்களும் பிரச்சனையை முன்வைத்தால் தேசிய அளவில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த அக்டோபர் 19ம் தேதி நிறைவேறியது. அதன்பின் இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு மாநில அரசு சார்பில் விளக்கமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை குறித்த திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அப்போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு கவர்னர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை ஆன்லைன் ரம்மியால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இதுவரை 19 மாநிலங்கள் இதுதொடர்பான மசோதாவை கொண்டுவந்துள்ளன. அனைத்து மாநிலங்களும் முன்வந்தால் தேசிய அளவில் தடை மசோதாவை கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசிக்கும்” என தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு கவர்னர் மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது என கூறினார்.