Earth quake : தென் கன்னடம் மாவட்டத்தில் உள்ள சுள்ளியா வட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

மங்களூரு : Karnataka Earthquake : தென் கன்னடம் மாவட்டத்தில் உள்ள சுள்ளியா வட்டத்தின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டத்தையடுத்து மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் (KSNDMC) வெளியிட்டுள்ள அறிக்கை :தென் கன்னடம் மற்றும் குடகு மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 1.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 1.23 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது, சுள்ளியா வட்டத்தில் உள்ள தொட்டகு மேரிக்கு மேற்கே 1.3 கிமீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதிகபட்சமாக 20-30 கிமீ சுற்றளவு வரை குறைந்த தீவிரம் கொண்ட நிலநடுக்கம் உணரப்பட்டது.

சில பகுதிகளில் லேசான நில அதிர்வு காணப்பட்டாலும், இந்த வகையான நடுக்கம் உள்ளூர் மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வட்டத்தில் உள்ள சம்பாஜே, கூனட்கா, தொடிகானா, பெராஜே, பதுகுஞ்சா மற்றும் குண்டாடு போன்ற இடங்களில் உணரப்பட்ட நில நடுக்கம் இதுபோன்றதுதான்.

நில நடுக்கத்தில் காணப்பட்ட தீவிரம் மிகவும் குறைவாக இருப்பதால் உள்ளூர் மக்கள் பீதியடைய தேவையில்லை. சுள்ளியா வட்டத்தில் ஜூன் 25 முதல் சனிக்கிழமை வரை நான்காவது நாளாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூன் 25, 28 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாறுபட்ட தீவிரத்தில் நில‌நடுக்கம் பலமுறை உணரப்பட்டது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுள்ளியா வட்டத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால், ஞாயிற்றுக்கிழமையும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே போல குடகு மாவட்ட மக்களும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற பீதியில் உள்ளனர். ஏற்கெனவே குடகு மாவட்டத்தில் மழைவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடரால் பெரும் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.