Panagal Park, Nandanam area traffic diversion : நவ. 12 முதல் பனகல் பூங்கா, நந்தனம் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம்

ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பனகல் பூங்கா, வெங்கடநாராயணா சாலை, நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் (Due to metro rail works, traffic diversion in Panakal Park, Venkatanarayana Road, Nandanam for one week from 12th November on a trial basis) செய்யப்படவுள்ளது.

இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு (Press release issued by Tamil Nadu Police) : தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒருவழிப் பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல்பூங்காவிலிருந்து மா.பொ.சி. சிலைக்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்குச் செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கட்நாராயண சாலை வழியாக உஸ்மான் சாலை (பனகல் பார்க்) அடையலாம்.

உஸ்மான் சாலையில் இருந்து பாஷியம் சாலை வழியாக போத்தீஸுக்கு செல்ல தடை செய்யப்பட்டு, தியாகராய சாலை, தணிகா லம் சாலை வழியாக திருப்பிவிடப்படும் . பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் தணிகாசலம் சாலை வழியாகச் செல்ல தடைசெய்யப்பபட்டு, சிவஞானம் சாலை, தியாகராய சாலை வழியாக திருப்பி விடப்படும். பர்கிட் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் வெங்கட நாராயணா சாலை வழியாக அண்ணா சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டு, ஹிந்தி பிரசார சபா தெரு, சௌத் போக் சாலை, ம.பொ.சி. சிலை சந்திப்பு வந்து அண்ணா சாலையை (Anna street) அடையலாம்.

தி.நகர் மேட்லி இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கடநாராயணா சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்புச் சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம். நந்தனம் சந்திப்பிலிருந்து வெங்கடநாராயணா சாலை வழியாகச் செல்லும்வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல் செல்லலாம் (All can go to Panagal Park as usual) என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.