Prime Minister Modi’s visit : கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானாவில் நவ. 11, 12-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி பயணம்

ரூ.25,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நிறைவடைந்துள்ள திட்டங்களை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார்

டெல்லி: பெங்களூருவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-ம் முனையத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு திண்டுகல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய (Gandhigram Rural Institute )நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் (Karnataka, Tamil Nadu, Andhra Pradesh, Telangana) நவம்பர் 11, 12, நவம்பர் 2022-ல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 11ம் தேதி காலை 9.45 மணி அளவில் பெங்களூரு சட்டப்பேரவையில் நிறுவப்பட்டுள்ள துறவியும், கவிஞருமான கனகதாஸ் மற்றம் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

காலை 10.20 மணி அளவில் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) மற்றும் பாரத் கவ்ரவ் கஷி தர்ஷன் ரயில் போக்குவரத்தை பிரதமர் கொடியசைத்துத் தொடக்கி வைக்க உள்ளார். பகல் 11.30 மணி அளவில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு நண்பகல் 12 மணி அளவில், நடபிரபு கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை பிரதமர் திறந்துவைக்க உள்ளார்.

அதைத் தொடர்ந்து 12.30 மணி அளவில் பெங்களூருவில் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாலை 3.30 மணி அளவில் தமிழ்நாடு திண்டுகல் மாவட்டம் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு (36th Convocation) நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டைச் சேர்ந்த 2,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் (More than 2,300 students) பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பட்டங்களை பெற உள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் ஓ.என்.ஜி.சி.யின் ஆழ்கடல் நீர்த் திட்டத்தை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். கெய்ல் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் அங்குல் இயற்கை எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். விசாகப்பட்டினத்தில் 6 வழி ரெய்ப்பூர் விசாகப்பட்டின பசுமைப் பொருளாதார வழித்தடத்தின் (Green Economy Corridor) ஆந்திரப்பிரதேச பிரிவுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தின் மறு மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் அடிக்கல் நாட்ட உள்ளார். ராமகுண்டமில் உரத்தொழிற்சாலையை பிரதமர் அர்ப்பணிக்க உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிரதமரால் இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.