Chief Minister Basavaraj Bommaiமழை வெள்ளத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : முதல்வர் பசவராஜ் பொம்மை

மைசூரு : Don’t do politics in rain floods: மழை வெள்ளத்தில் மாநிலம் தத்தளித்து வருகிறது. இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார்.

மைசூருவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் ஒற்றுமையாக போர்க்கால அடிப்படையில் (On a wartime basis) செயல்பட வேண்டும், எந்த அரசியல் கட்சியையும் அரசியல் செய்யக்கூடாது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குளங்களும், ஏரிக்களும் நிரம்பி வழிகின்றன. அனைத்து இடங்களிலும் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. “நாங்கள் மழையுடன் போர் தொடுத்துள்ளோம், இந்த சவாலைஅனைவரும் ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும். ஆனால் அற்ப விஷயங்களில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது வழக்கமாகிவிட்டது என்றார்.

மேலும் பெங்களூரு முழுவதும் பெய்து வரும் கனமழையை சமாளிக்க, அரசு, ரூ. 300 கோடி ரூபாய் வழங்க உள்ளது என, முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு கடந்த 90 ஆண்டுகளில் இவ்வளவு கன மழையை கண்டதில்லை (Never seen such heavy rain in 90 years). ஆனால் பெங்களூரு முழுவதுமே நீரில் மூழ்குவது போல் கணிக்கப்பட்டது. உண்மையில், இந்த பகுதியில் 69 ஏரிகள் இருப்பதால், அவை அனைத்தும் நிரம்பிவிட்டதால், பெங்களூரின் இரண்டு மண்டலங்கள் மட்டுமே மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் மகாதேவபுரா மண்டலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மழைக்கு வடிகால் எதுவும் வடிவமைக்கப்படவில்லை.

பெங்களூரில் உள்ள 164 ஏரிகளும் நிரம்பியுள்ளன. மழை எதிர்பாராதது. துரதிருஷ்டவசமாக, மகாதேவபுரா மண்டலத்தில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. ராஜகால்வாய் மற்றும் வாய்க்கால் மூடப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளிலும், ஐடி பூங்கா முன்பும் மழைநீர் தேங்கியுள்ளது (Rainwater has stagnated in residential areas and in front of the IT Park). மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக உள்ளது. மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் தண்ணீர் செல்ல இடமில்லாமல் உள்ளது. வர்த்தூர், பெல்லந்தூர் ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்படவில்லை.

தவிர, இந்த இரண்டு ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறப்பது கட்டுப்படுத்தப்பட்டது. புதன்கிழமை மாலைக்குள் தண்ணீர் வெளியேற்றும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது (The water evacuation is expected to be completed by Wednesday evening). நானே நேரில் சென்று ஆய்வு செய்வேன். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்பட்டு சுமூகமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவ இரண்டு மாநில பேரிடர் மீட்பு படைகள் (SDRF) ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வாரியம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய‌ ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள் .பெங்களூருவில் மழை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சமாளிக்க, ரூ. 300 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.