Pet Dog Bites Boy :லிஃப்டில் சிறுவன் மீது நாய் கொடூரமான தாக்குதல்: இந்த வீடியோ உடல் கூச்செரியும் வகையில் உள்ளது

உத்தரபிரதேசம்: லிப்டில் இருந்த சிறுவனை இந்த நாய் திடீரென தாக்கி கடித்து குதறி உள்ளது. ஆனால் அங்கு நின்றிருந்த அந்த பெண் அந்த சிறுவனை நாயிடம் இருந்து காப்பாற்ற முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்.

உத்தரபிரதேசம் : Pet Dog Bites Boy : நாய்கள் எவ்வளவு அழகா இருந்தாலும், கொஞ்சம் கடித்தாலும் நாய் கடித்தால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உறுதி. நாம் வளர்த்து வந்த நாய் நமக்கு செல்லப் பிராணியாகத் தெரிந்தாலும், அது மற்றவருக்கும் அப்படித் தோன்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நாய் கடியால் இறந்த பல குழந்தைகளின் கதைகளை நாம் கேட்றிந்துள்ளோம். இதனை உறுதி செய்யும் வைகையிலான‌ ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் ஹவுசிங் சொசைட்டியின் (Ghaziabad Housing Society) லிப்ட் ஒன்றில் நடந்த இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களில் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹவுசிங் சொசைட்டிக்கு சொந்தமான லிப்ட் ஒன்றில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன், அவர்களுடன் ஒரு நாய் அங்கு உள்ளது. அது அந்த‌ பெண்ணின் நாயாக இருக்கலாம். லிப்டில் இருந்த சிறுவனை நாய் திடீரென தாக்கி, கடித்து குதறுகிறது. ஆனால் அந்த பெண் அந்த பையனை நாயிடம் இருந்து காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கிறார். இந்த பயங்கர காட்சி அங்கிருந்த சிசி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் (On social networking sites) வைரலாகி, சிறுவனை நாய் கடித்து குதறியது. நாய் கடித்ததில் ஏற்பட்ட காயங்களைத் தொட்டு சிறுவன் வலியால் கதறி அழும் காட்சி மனதை நெருடுகிறது. காசியாபாத், ராஜ்நகர் விரிவாக்கத்தில் உள்ள சார்ம்ஸ் கவுண்டி சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது, ​​இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.