Don’t come to meet me-VK Sasikala: என்னை சந்திக்க வராதீர்கள்; ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்: வி.கே.சசிகலா

சென்னை: Don’t come to meet me-VK Sasikala: சசிகலா தனது பிறந்த நாளில் தொண்டர்கள் என்னை சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் வந்து சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்து கொண்டேன். உங்களுடைய அன்புக்கு தான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

அதே சமயத்தில், தான் விரைவில் உங்களையெல்லாம் தேரில் வந்து சந்திக்க, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களையெல்லாம் நான் காண இருக்கிறேன். உங்களோடு தேரில் உரையாட இருக்கிறேன், ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து பானது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளையே, எனக்கு நீங்கள் அளிக்கின்ற, சிறந்த பிறந்ததாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு அளிக்கும் பிறந்ததாள் பரிசாகவும் எண்ணுகிறேன்.

என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, பொறுமையோடு இருங்கள் ஒளிமயமான எதிர்காலம் தம் முன்னே தமக்காகவே காத்துகொண்டு இருக்கிறது. அதாவது “தல்ல தல்ல பிள்ளைகனை தாய இந்த நாடே இருக்குது தாலி பான்று தம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் பாடியது போன்று, இந்த மண் தம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் தம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காற்று கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஒற்றை தலைமை பிரச்சனையில் அதிமுகவின் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் அணியின் பக்கம் ஆதரவாளர்கள் குவிந்து வருவதாகவும், ஒன்னரை கோடி தொண்டர்களில் 80 சதவீதம் பேர் ஆதரவு அளித்து வருவதாகவும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்து வருகிறார்.

மேலும் சசிகலா அதிமுகவை கைப்பற்றவும், ஓரணியில் சேரவும் ஓ.பன்னீர்செல்வம் கிரீன் சிக்னல் காண்பித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.