Dgp Sylendra Babu Warns: சைபர் குற்றம் அரங்கேறி வருகிறது: டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: சமீபத்தில் புதிய சைபர் குற்றம் அரங்கேறி வருவதாக (Dgp Sylendra Babu Warns) தமிழ்நாட்டின் டி.ஜி.பி. சைலேந்திர பாபு வீடியோ மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்: கடந்த ஆண்டில் மட்டுமே 60,623 சைபர் குற்றங்களுக்காக வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் இது பற்றி பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, சைபர் குற்றவாளிகளிடமிருந்து பொதுமக்களுடைய தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வரும். அதில் பேசும் நபர், நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துவிட்டது. இதனை பற்றி தெரிந்து கொள்ள 1யை அழுத்தவும் என்று சொல்வார்கள். பின்னர் அதனை பற்றி விளக்கும்போது நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருட்களும் சட்டத்திற்கு எதிரான பாஸ்போட்டும் திரும்ப வந்துள்ளது. எனவே நாங்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம் என்று சொல்வார்கள்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பின்னர் நான் அப்படி செய்யவில்லை. எனவே அதை பற்றி எதுவும் தெரியாது எனறு சொல்வார். மேலும் ஒரு லட்சம் அல்லது 5 லட்சம் அனுப்பினால் உங்களை வழக்கறிஞர் மூலம் விடுவிக்கிறோம் என்ற கூறுவார்கள். இது போன்று பலவற்றை ஏமாற்றியதாக புகார்கள் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.