Danger road accident : சாலை பள்ளத்தால் கீழே விழுந்த பெண்: உடல் கூச்செரியும் வீடியோ வைரலாக பரவுகிறது

பெங்களூருரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக இந்த பயங்கர‌ சாலை பள்ளங்களுக்கு இரையாகி வருகின்றனர். இது போன்று பல‌ சம்பவங்கள் நடந்த பின்னரும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாத பெங்களூரு மாநகராட்சி.

பெங்களூரு: (Danger road accident) சிலிக்கான் சிட்டியில் சாலை பள்ளங்கள் தொடர்ந்து உயிர் பலி வாங்குகிறது. இந்த ஆண்டு இந்த சாலை பள்ளத்தில் சிக்கி 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதைப் பற்றி பெங்களூரு மாநகராட்சி கவலைப்படவில்லை. இதற்கிடையில், நகரில் உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் இளம் பெண் ஒருவர் நடுரோட்டில் கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் இந்த பயங்கர வீடியோ வைரலாகி வருகிறது.

இரண்டு நாட்களுக்கு முன், கஸ்தூரி நகரில் உள்ள மேம்பாலத்தில் வாகனம் ஓட்டிச் சென்ற இளம் பெண், அங்கிருந்த பள்ளம் காரணமாக, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கீழே விழுந்தார் (lost control of the vehicle and fell down on the road). அதிர்ஷ்டவசமாக, பின்னால் வாகனம் ஏதும் இல்லாததால், இளம்பெண் காயமின்றி உயிர் தப்பினார். குறிப்பாக ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் ஏற்படவில்லை. ஆனால் அந்த குழியில் இளம் பெண் உருளும் வீடியோ வைரலாக பரவி வருகிறது, மேலும் பெங்களூரு மற்றும் மாநில மக்கள் தலைநகரில் உள்ள மோசமான சாலைகளுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பயங்கர காட்சி இளம்பெண்ணின் பின்னால் சென்ற ரிஜேஷ் என்பவருக்கு சொந்தமான காரின் டேஷ்போர்டு கேமராவில் (Car dashboard camera) பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டு கார் உரிமையாளர் ரிஜேஷ் சுட்டுரையில் பதிவு செய்து பெங்களூரு மாநகர‌ காவல் ஆணையர் உள்ளிட்ட பலரை டேக் செய்துள்ளார். இதனால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை பள்ளம் பேரழிவின் வீடியோ வைரலாக பரவிய நிலையில்,பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை பார்வையிட்டு தற்காலிகமாக பள்ளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பெங்களூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடந்த பல ஆண்டுகளாக இந்த பயங்கர‌ சாலை பள்ளங்களுக்கு இரையாகி வருகின்றனர், பல சம்பவங்கள் நடந்த பின்னரும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாத பெங்களூரு மாநகராட்சி ஆண்டுதோறும், பல கோடி ரூபாய் செலவழித்து, சாலைப் பள்ளங்களை சீரமைத்தும் (Repairing road potholes), தரமான பணிகள் மேற்கொள்ளப்படாததால், சாலைகள் திறந்த வெளி குழியாக மாறி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.