CT Ravi, Ashwath Narayan, Shobha Karandlaje : சி.டி.ரவி, அஸ்வத் நாராயண், ஷோபா கரந்த்லாஜே: பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பை யார் சுமக்கப் போகிறார்கள் ?

ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்பது பாஜகவின் கணக்கு. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் என்பதால், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே மாநில பாஜக தலைமைக்கு ஏற்றது என்று கூறப்படுகிறது.

பெங்களூரு: Who will take the responsibility of BJP state president : அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் முதல்வர் மாற்றம் என்ற வதந்திக்கு பின், மாநில பாஜவில்,மாநில தலைவர், நளின்குமார் கட்டீல் மாற்றம் என்ற செய்தி பரவி வருகிறது. பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், நளின் குமார் கட்டீலின் மாற்றத்தின் உண்மையான ரகசியம் இங்கே வெளியாகியுள்ளது.

மாநில பாஜக தலைவராக நளின்குமார் கட்டீல் (Nalin Kumar Katil) மாற்றப்படுவ‌தற்கான காரணங்களைப் ஆராய்ந்தால், மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மலா குமார் சுரானாதான் தலைவர் போல செயல்படுகிறார். நளின்குமார் கட்டீல் பெயருக்குதான் மட்டுமே மாநில பாஜகவின் தலைவராக இருக்கிறார் என்று அக்கட்சியில் பரவலாக கூறப்படுகிறது. மேலும், நளீன் குமார் கட்டீல் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் நம்பிக்கையையும் பெறத் தவறிவிட்டதாகவும், கடற்கரை மாவட்டங்களுக்கு மட்டும் அவர் தலைவராக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பிரவீன் நெட்டாருவின் கொலைக்குப் பிறகு, நளின் குமார் கட்டீலுக்கு ஆதரவான ஒருமித்த கருத்து இல்லாமல் போய்விட்டது.

2023 ஆண்டு கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக மாநில பாஜகவில் பார்க்கப்படுகிறது. எனவே மாநிலத்தில் அக்கட்சிக்கு மிகவும் வலுவான மற்றும் சுறுசுறுப்பான தலைவர் தேவை என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கவும், மாநில செயல் வீரர்களுடன் எதிர் வியூகத்தை உருவாக்கவும் ஒரு தலைவர் நியமிப்பதை முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (Former Chief Minister BS Yeddyurappa) விரும்கிறார் என்பது முழு கர்நாடகத்திற்கும் தெரியும். நளின் குமாருக்குப் பிறகு, மாநில பாஜக தலைவர்களாக யார் வருவார்கள் என்று பார்த்தால், சி.டி.ரவி, டாக்டர் அஸ்வத் நாராயணா, ஷோபா கரந்த்லாஜே ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மாநிலத் தலைவராக்க வேண்டும் என்பது பாஜகவின் கணக்கு. காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் என்பதால், ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே மாநில பாஜக தலைமைக்கு ஏற்றது என்று கூறப்படுகிறது.

முன்மொழியப்பட்ட பெயர்களுக்குப் பின்னால் உள்ள கணக்கீடு இங்கே.

சி.டி.ரவி (பாஜக தேசிய பொதுச் செயலாளர்)

ஆக்ரோஷமான தலைவர், இந்து மத ஆதரவாளர்களை கவரும் வகையில் உள்ளவர் என்று கருத்தப்படுகிறார்.

டாக்டர் அஸ்வத் நாராயணா (அமைச்சர்)

டி.கே.சிவகுமாருக்கு பதிலடி கொடுக்கும் சக்தி உள்ளவர். மெத்த படித்தவர்.பெங்களூரின் மையப்பகுதியில் இருக்கிறார்.அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.வாக்குகளை ஈர்க்கும் வல்லமை படைத்தவர்.

ஷோபா கரந்த்லாஜே (மத்திய அமைச்சர்)

மகளிர், இந்துத்துவா, கடலோர மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம், மகளிர் வாக்குகளை கவர‌ முடியும் என்ற நம்பிக்கை.

இது தவிர, ஓபிசி அல்லது பட்டியலிடப்பட்ட சாதியினரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். சுனில் குமார் (Sunil Kumar) – ஓபிசி, அரவிந்தா லிம்பாவளி (Aravinda Limbavali)- பட்டியலின‌ சாதி. சுனில் குமார்- இந்துத்துவா, ஓபிசி (ஈடிகா சமூகம்) கரையோர பகுதி, ஆக்ரோஷமான, ஆர்வலர்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்படுபவர். அரவிந்தா லிம்பாவலளி- பட்டியலின‌ சாதி. நல்ல அமைப்பாளர், பெங்களூருவைச் சேர்ந்தவர், அனுசரித்து போகும் சுபாவம், தேர்தலில் கணக்கிட்டு பணியாற்றுவது. இதேவேளை, நளின் குமார் கட்டீல் மாற்றத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தேர்தலின் போது புதிய தலைவர் தேவை இல்லை எனவும், கட்டீலே தொடரட்டும் எனவும் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே பாஜக மாநில தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படும் தகவலால் பாஜக மட்டுமின்றி, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.