Leader of Opposition Siddaramaiah : பாஜக ஆட்சியில் கர்நாடக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஊழல்: எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா

பெங்களூரு: Corruption in BJP rule is unprecedented in the history of Karnataka : பாஜக ஆட்சியில் கர்நாடக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஊழல் நடைபெற்றுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எடியூரப்பா இரண்டு ஆண்டுகளும், பொம்மை ஓராண்டும் ஆட்சி செய்துள்ளனர். பொம்மை கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதியும் ஆட்சியில் அமர்ந்தார். வரும் 28ம் தேதி ஓராண்டு சாதனை மாநாட்டை (A one-year achievement conference) நடத்துகிறார் பசவராஜ் பொம்மை.

பசவராஜ் பொம்மை ஆட்சிக்கு வந்ததும், ஜனதா கட்சி பின்னணியில் இருந்து வந்துள்ளதால் வித்தியாசமாக செயல்படுவார் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால் கடந்த ஓராண்டில் அவரது நிர்வாகம் முழு ஏமாற்றமாகவே உள்ளது. பொம்மையின் ஆட்சியில் கர்நாடக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஊழல் நடைபெற்றுள்ளது. ஒப்பந்ததாரர் 40 சதம் கமிஷன் தருவது இதுவே முதல் முறை. ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (Contractor is Santosh Patil) பணம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து கமிஷன் தராததால், அமைச்சர் பணத்தை விடுவிக்கவில்லை என, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பிரச்சினையில் நாங்கள் போராடியதையடுத்து, இதற்குப் பொறுப்பான அமைச்சர் ராஜினாமா செய்தார். தற்போது அவருக்கு க்ளீன் சிட் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அமைச்சருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வேலையை காவல்துறை செய்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள். எனவே, காவல்துறையினரிடம் நீதி கிடைக்காது என்பதால் நீதி விசாரணை (Judicial inquiry) கோரியுள்ளோம். ஆனால் மாநில அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. இப்போதும் நீதி விசாரணையை கோருகிறோம். கடிதம் எழுதி வைத்து ஒப்பந்ததாரர் இறந்துவிட்டாலும், அமைச்சரை நிரபராதி என்று கூறுவது நியாயமற்றது.அ

இது இரட்டை எஞ்சின் அரசு என்று பாஜக முதுகில் தட்டிக் கொள்ளும். கர்நாடகா மாநிலத்துக்கு, மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. இது போன்று வேறு எந்தக் காலத்திலும் மாநிலத்திற்கு அநீதி இடைக்கப்பட்டது கிடையாது. 14-வது நிதிக்குழுவில் 42 சதம் மாநிலங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. நமது மாநிலத்திற்கு 42 சதம் மானியம் வந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 31 சதம் மட்டுமே மாநிலத்திற்கு வந்துள்ளது.

15-வது நிதிக் குழுவிலும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதில், கடந்த நிதிக் குழுவில் வழங்கியதை விட 1.07 சதம் வித்தியாசம் மட்டுமே காணப்பட்டது. இதனால் நமது மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 5 ஆயிரம் கோடிஅறிவித்தார்கள். ஆனால் அதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Union Minister Nirmala Sitharaman) மாநில அரசுக்கு வழங்கவில்லை. மாநில பாஜக‌ தலைவர்கள் யாரும் கொடுக்க வலியுறுத்தவில்லை. எடியூரப்பா உள்துறை அமைச்சராக இருந்தபோது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்வதற்கு பதிலாக பொம்மை தான் செல்வது வழக்கம். முதல்வர் ஆன பிறகும் அவர் போகிறார். ஆனால் அரசுக்கு வர வேண்டிய நிதியைக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதனால், அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஜிஎஸ்டி நிவாரணம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய சுமார் ரூ.11,000 கோடி ஜிஎஸ்டி நிதி வழங்கப்படவில்லை. மாநிலத்தில் இருந்து 25 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினராக (Chief Minister as member of GST Council )இருந்தாலும், மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த நிலையில் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடுகின்றனர்.

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், சாமானியர்கள் பயன்படுத்தும் அரிசிக்கு (Rice used by common people) யாராவது ஜிஎஸ்டி போடுவார்களா?. துணைக்குழு தலைவராக பசவராஜ பொம்மை செய்த ஏழைகளின் ரத்தம் குடிக்கும் பணி இது. பொம்மை முதல்வராக இருந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு புதிய வீடு கூட கட்டவில்லை. பெங்களூரு நகரில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தருவதாக எங்கள் அரசு அறிவித்து நிலம் ஒதுக்கியது. முன்பு விண்ணப்பித்தவர்கள் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், இந்த அரசு மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மனுதாரர்களுக்கு ஆதரவாக அரசே செயல்பட்டு வருகிறது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு இல்லாவிட்டால் மாநிலத்தில் யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதுதான் இந்த அரசின் சாதனை. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. 2018-ல் பாஜக அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன? 10 சதம் கூட இல்லை. 5 ஆண்டுகளில் ரூ. 150 லட்சம் கோடி பாசனத்துக்கு (150 lakh crore for irrigation) செலவிடப்படும் என்றனர். ரூ. 50 ஆயிரம் கோடி கூட இதுவரை செலவிடப்படவில்லை. அதேபோல வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. பாஜக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் கெம்பண்ணா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது. இந்த அரசாணையில் ஒப்பந்த வேலைகளை செய்ய முடியவில்லை, எங்களிடம் 40 சதம் கமிஷன் கேட்கிறார்கள், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் (written a letter to the Prime Minister). ஒரு ஆண்டு ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பசவராஜ பொம்மையின் அரசுக்கு பூஜ்ஜியம் என்ற மதிப்பெண்ணைதான் தர முடியும் என்றார்.